Wednesday 13 July 2011

அல்சரைத் தவிர்ப்பது நம் கையில்

        
நண்பர்களே, இன்றைய காலகட்டத்தில் நாம் நம் குடும்பத்தை வசதியாக வைத்திருப்பதற்கும், மற்றவர்களுக்கு முன் நம்மை தரம் உயர்த்தி காட்டவும் பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை நாம் அடைய பல வழிகளில் முயற்சிக்கிறோம். அந்த பணத்திற்கான உழைப்பை செலவளிக்கும் நாம் நம் ஆரோக்கியத்தை மறந்து விடுகிறோம். பணத்தை பதுக்கும் நாம் நம் வயிற்றின் தேவையை மறந்து விடுகிறோம். நம் வயிற்றுக்கு தேவையானது பணம் அல்ல, உணவு அதுவும் சரியான வேளையில் உணவு. இந்த உணவிற்காக தானே நாம் சம்பாதிக்கிறோம். ஆகவே நம்மை வெளிப்படுத்திக்கொள்ள காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது வயிற்றையும் கவனிக்க வேண்டும். வயிறு நிறைந்தால் தான் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். சக்தி இருந்தால்தான் உழைப்பு உழைக்க முடியும். அந்த உழைப்பு இருந்தால் தான் பணம் கிடைக்கும். வயிற்றுக்கு தேவையான உணவு கிடைக்காவிடில் அல்சர் என்ற நோய் வரும்.


அல்சர் என்றால் என்ன?
    வயிற்றில் அல்சர் உண்டாவதற்கு முக்கியமான காரணம் ஒரு வகை கிருமி. இந்த கிருமியின் பெயர் எச் - பைலோரே. இந்த கிருமி இரைப்பையின் சுவர்களில் எப்போதும் ஒட்டிக கொண்டே இருக்கும். வயிற்றில் சுரக்கும் அமிலம் நெருப்பு போன்ற வீரியம் கொண்டதால், அமிலம் சுரக்கும் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தக் கிருமி இரைப்பையின் சுவர்களைத் துளைத்துக் கொண்டு பதுங்கி விடும். அமிலத்தன்மை குறைந்தவுடன் வெளியே வந்து விடும்.

    இப்படி மாறி மாறி பல்வேறு இடங்களில் இரைப்பையைத் துளைத்து புண்ணாக்கி விடுவாதனால் அல்சர் நோய் உண்டாகிறது. அல்சர் நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழி சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது தான். நினைத்த நேரம் உணவு உன்ன நாம் ஒன்றும் சாமியார் இல்லை. நமது வீடும் உணவகம் இல்லை. எனவே, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட்டு அல்சருக்கும், அதனால் உண்டாகும் மருத்துவமனை அலைச்சலுக்கும் விடை கொடுப்போம்.
 
source : prakash